3. சமயம் 1. சமண சாக்கிய மதங்கள் கி.பி. 5,6,7 ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயமும் சாக்கிய (பௌத்த) சமயமும் தமிழ்நாட்டிலே பெரிதும செழித்து வளர்ந்திருநதன. முககியமாக 7 ஆம் நூற்றாண்டில் இந்த மதங்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் மிக உச்சநிலையில் இருந்தன. சைவ வைணவ சமயங்கள் மங்கிக் கிடந்தன. மக்கள் பெரிதும சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். ஏன், அரசரங்வட சமண மதத்தைத் தபவியிரந்தனர். கி.பி. 600 மதல் 630 வரையில் அரசாண்ட மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னன் சமண சமயத்தவனாக இரந்தான். அவனைத் திரநாவுக்கரசர் சைவசமயத்தில் சேர்த்தார். திரநாவுக்கரசரே முதலில் சமணசமயத்தில் இருநதவர்; பிறகுதான் சைவரானார். பாண்டிநாட்டை அரசாண்டு வந்த நெடுமாறன் என்னும் பாண்டிய அரசனும் சமண சமயத்தவனே. அவனைத் திருஞானசம்பந்தர் சைவராக்கினார். இந்த 7 ஆம் நூற்றாண்டிலேதான் சைவ அடியார்களான நாயன்மார்களும் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் “பக்தி” இயக்கத்தை ஆயுதமாகக்கொண்டு சமண சாக்கிய சமயங்களை அழிக்கவும், சைவ வைணவ சமயங் வளர்க்கவும் முற்பட்டார்கள். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலே சமணசமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டிலே செழிததிருந்தது என்பதற்குச் சைவ நூல்களே சான்று கூறுகின்றன. இந்நூற்றாண்டின் தொடக்கத்திலே வாழ்ந்திருநத சிவபாத இருதயர், சமணசாக்கிய மதங்கள் மிகுந்திருந்ததைக் கண்டு துன்பம் அடைந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. “மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு ஏதமில்சீர்ச் சிவபாத இருதயர்தாம் இடருழந்தார்.1” |