பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 315 |
புராணம் கூறுகிறது. கோட்புலியார், நந்தியின் சேனைத் தலைவர் என்பதற்கு நேரான சான்றுகள் இல்லை என்றாலும், நன்திவர்மன் காலத்தில் அவனுடைய நாட்டில் வாழ்ந்திருந்த இச் சேனைத் தலைவர், நந்திவர்மனுடைய சேனைத் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. “செங்கோல் அரசன் அருளுரிமைச் சேனாபதியாம் கோட்புலியன்”18 என்றும், “நலம்பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண் குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியன் எனும்பெயரார் தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியராய் வேற்றுப் (பார்”19 புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப் என்றும், “வேந்தன் ஏவலின் பகைஞர் வெம்போரில் செல்கின்றார்”20 என்றும், “மன்னவன்தன் தெம்முனையில் வினைவாய்த்து மற்றவன்பால் நன்நிதியின் குவைபெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்”21 என்றும் பெரியபுராணம் கூறுகிறது. “கூடாமன்னரைக் கூட்டத்துவென்ற கொடிறன் கோட்புலி” என்று, இவருடைய நண்பராகிய சுந்தரமூர்த்தி நாயனார் இவரைத் திருநாட்டியத்தான்குடி பதிகத்தில் கூறுகிறார். சோழநாட்டு நாட்டியத்தான்குடி என்னும் ஊரில் இருந்த கோட் புலியாரை, வளவன் (சோழன்) சேனாபதி என்று பெரிய புராணம் கூறுகிறதுபோலும். உண்மையில் பல்வ மன்னனுடைய சேனாபதியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னை? சோழ அரசர்கள் அக் காலத்தில் பல்லவருக்குக் கீழடங்கிக் குறுநில மன்னர்களாக இருந் தார்கள். அவர்கள் வேற்றரசருடன் சுதந்தரராகப் போர் செய்திருக்க |