பக்கம் எண் :

316மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

முடியாது. பல்லவருக்குக் கீழடங்கிய அவர்கள் பல்லவ அரசர் சார்பாகத்தான் போர் செய்திருக்க முடியும். ஆகவே, கோட்புலியார், நந்திவர்மன் கீழ் சேனாபதியாக இருந்து போர்செய்து வென்றார் என்பதே பொருத்தமாகும்.

அதே காலத்தில், சோழநாட்டுத் திருமங்கலம் என்னும் ஊரில் இருந்த, ஏயர்கோன் கலிக்காமர் என்பவரைச் சோழருடைய சேனா பதிக்குடியில் பிறந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. சோழ நாட்டுக் கஞ்சாறூரில் இருந்த மானக்கஞ்சாரரும், அரசரிடம் சேனாபதித் தொழில் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவருடைய மகனை மேற்சொன்ன ஏயர்கோன் கலிக்காமர் மணஞ் செய்தார். இவர்கள், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில், அதாவது நந்திவர்மன் காலத்தில் இருந்தவர்கள். ஆனால், இவர்கள் போர்க்களம் சென்று போர் செய்ததாகப் பெரிய புராணம் கூறவில்லை.

நந்திவர்மனுடைய முதல் அமைச்சராக இருந்தவன், அக்ரதந்த மரபில் வந்த நம்பன் என்பவன்.22

சிறப்புப் பெயர்கள்

தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குச் சில சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை: விடேல் விடுகு, அவனிநாரணன் உக்ரதகோபன், குவலய மார்த்தாண்டன், தேசபண்டாரி, மானோதயன், நயபரன், கழற்சிங்கன், பல்லவர் கோளரி முதலியன. இவ்வரசன் பேரில் இயற்றப்பட்ட நந்திக் கலம்பகம் இப்பெயர்களைக் கூறுகின்றன. பாரத வெண்பா; இவனைப் பண்டிதவத்சலன் என்று கூறுகிறது.

விடேல் விடுகு என்னும் பெயர், நந்திவர்மன் முடிசூடியபோது பெற்ற பெயர். இப்பெயர் இவனுடைய ஆணையைக் குறிக்கிறது. இப்பெயரை இவனுடைய பாட்டனான இரண்டாம் நந்திவர்மனும் கொண்டிருந்தான். பாட்டன் கொண்டிருந்த திருவாணைப் பெயராகிய விடேல்விடுகு என்னும் பெயரை இவனும் பெற்றிருந்தான் என்பதை நந்திக் கலம்பகத்தினாலும் அறியலாம்.

“வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான்
விடைமண் பொறியோலை விடேல்விடுகே”

என்பது நந்திக் கலம்பகம். இதில், விடைமண் பொறியோலை என்பது, விடை (எருது) முத்திரை பொறிக்கப்பட்ட திருமுக ஓலை