பக்கம் எண் :

320மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

சுந்தரமூர்த்தி நாயனார் கூறிய காடவர்கோன் கழற்சிங்கரும், பெரியபுராணம் கூறுகிற கழற்சிங்க நாயனாரும், தெள்ளா றெறிந்த நந்திவர்மனும் ஒருவரே என்று சரித்திரம் ஆராய்ந்தோர் கூறுவது சாலவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்” என்று இவ்வரசனைச் சுந்தரர் கூறியதற்கு ஏற்பவே, நந்திக் கலம்பகமும் இவனை, “அவனை நாராயணன்” என்று கூறுகிறது. மேலும்,

“வடவரை யளவும் தென்பொதி யளவும்
விடையுடன் மங்கல விசையமும் நடப்ப”

என்றும்,

“அலைகதிர்வேல் படை தந்தி
       அவனிநாராயணன் இவ்
உலகுடையான் திருமுடியும்
       உள்ளமுமே உவந்தனையே”

என்றும் கலம்பகம்36 கூறுவதனால், இவன் பாரத நாட்டிலே அக் காலத்தில் பேர்பெற்ற அரசனாக விளங்கினான் என்பதை அறியலாம்.

குறுகோடும் வாதாபியும்

குறுகோட்டைப் போரைப் பற்றித் தவறான கருத்துக்கள் கூறுப்படுவதை இங்குக் காட்ட விரும்புகிறேன். நந்திக் கலம்பகம் 2, 16, 35, 84-ஆம் செய்யுள்களில் நந்திவர்மன் குறுகோட்டையை வென்றான் என்று கூறுகிறது. கொடும்பாளுர் மூவர்கோயில் சாசனம் கூறுகிற விக்கிரமகேசரியின் பாட்டனான் வாதாபிஜித் என்பவனை, குறு கோட்டைப் போருடன் சில சரித்திரக்காரர்கள் இணைக்கிறார்கள். திரு. சி. மீனாட்சி, தாம் எழுதிய பல்லவர்காலத்து அரசாட்சியும் சமூக வாழ்க்கையும் என்னும் ஆங்கில நூலில் இந்தக் கருத்தை வெளி யிட்டிருக்கிறார்.37

அவர் எழுதுவதன் கருத்து இது :

“விக்கிரமகேசரியின் பாட்டன் பாதாபிஜித் (வாதாபியை வென்றவன்) என்று கூறப்படுகிறான். 9-ஆம் நூற்றாண்டின் இடையில் இருந்த அந்தச் சிற்றரசனுடைய சிறப்புப் பெயர், இதுவரையில் அறிஞர்களைத் திகைக்கச் செய்திருந்தது. அவர்களுக்கு இப்போது