பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 325 |
விஜயாதித்தியன் கி. பி. 848 முதல் 892 வரையில் நாற்பத்து நான்கு ஆண்டு அரசாண்டான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை : குணகன், பரசக்கர ராமன், ரணரங்க சூத்ரகன், மனுஜப் பிரகாரன், விக்ரம தவலன், நிருபதி மார்த்தாண்டன், விருதங்கபீமன், புவனகந்தர்ப்பன், அரசங்ககேசரி, திபுரமர்த்திய மகேஸ்வரன், திரிபுவனாங்குசன் என்பன. அமோசுவர்ஷன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இராஷ்டிரகூட இராச் சியத்தை அரசாண்டவன் சர்வன் என்பவன். சர்வனுக்கு அமோக வர்ஷன் என்னும் பெயரும் உண்டு. இவன் கி. பி. 814 முதல் 878 வரையில்அரசாண்டான். இவன் அரசாட்சிக்கு வந்தபோது இவனுக்கு வயது பதினான்கு. ஆகவே, இவனுடைய உறவினனும் குஜராத்து தேசத்தில் சாமந்த அரசனாக இருந்தவனும் ஆன கர்க்கன் என்பவன், இவன் வயது அடையும்வரையில் அரசாட்சியை நடத்தினான். இவன், ஏறக்குறைய கி. பி. 830 -இல், வெங்கியிலிருந்து கீழைச்சளுக்கிய இராச்சியத்தை அரசாண்ட விஜயாதித்தியனை (இரண்டாமவன்) வென்று தன் கீழடக்கினான். ஆனால், மேலே கூறியபடி, விஜயாதித் தியன் பேரனான மூன்றாம் விஜயாதித்தியன், தன் சேனைத் தலைவன் பாண்டுரங்கன் உதவியினால் கி. பி. 845-இல் அமோக வர்ஷனை வென்று சுதந்தரம் அடைந்தான். அமோகவர்ஷன் கங்க அரசர்களுடன் விடாமல் போர் செய்தான். இப்போர் ஏறக்குறைய இருபது ஆண்டு நடந்தது. கடைசியில் கி. பி. 860-இல் அமோகவர்ஷன் சேனையைக் கங்க அரசன் முறியடித்துத் துரத்தினான். பிறகு, அமோகவர்ஷன் தன் குமாரத்தி சந்த்ரோபலப்பை (சந்தோபலவ்வை) என்பவளை பூதுகன் என்னும் கங்க அரசனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இத் திருமணத் துக்குப் பிறகு கங்க ராஷ்டிரகூடப் போர் ஓய்ந்தது. அமோகவர்ஷன் மாளவ தேசத்தைக் கைப்பற்ற அடிக்கடி படையெடுத்துச் சென்றான். அந்த மாளவ தேசத்தைக் கைப்பற்ற பிரதிஹார அரசனும் முயற்சி செய்தான். அந்தப் போர்களில் அமோக |