| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 367 |
மாறன், “நெல்வேலி வென்ற நெடுமாறன்” அல்லன், “பொடியாடும் திருமேனி நெடுமாறன்” ஆவன். வரகுணபாண்டிய னாகிய மாறன் (நெடுமாறன்), மிகுந்த சிவபக்தனாய் போருக்குச் செல்லும்போதும் உடம்பு முழுவதும திருநீறு பூசிப் (பொடியாடிப்) போருக்குச் செல்வான் என்று கூறுப்படுவதால், சுந்தரர் கூறிய “பொடியாடிடுந் திருமேனி நெடுமாறன்” வரகுணபாண்டியனே என்று உறுதியாக நம்பலாம். இவன் பெயர் திருத்தொண்டத் தொகையில் கூறப்படாதபடியால் இவனைச் சிவனடியார்களில் ஒருவனாகப் பெரியபுராணம் கூறவில்லை. ஆனால், இவனுடைய உயர்ந்த சிவபக்தியைத் திருவிளையாடற் புராணங்களும், பட்டினத்துப் பிள்ளையாரும் கூறுகிறார்கள். சிவபக்தனாகிய வரகுண பாண்டியன், நேரில் சிவலோகம் சென்று தரிசிக்கவேண்டுமென்று ஆசைப்பட, அதையறிந்த சிவபெருமான் நந்திதேவரைக் கொண்டு அரசனுக்குச் சிவலோகத்தைக் காட்டியதாகப் புராணக்கதை கூறுகிறது.34 வரகுணபாண்டியனுடைய சிவபக்தியைப்பற்றி வேறு சில கதை களும் கூறப்படுகின்றன. கள்ளன் ஒருவனைப் பிடித்துக் கொண்டுவந்து இவர் முன்பு விட்டார்கள்; அக்கள்ளன் உடம்பு முழுவதும் திருநீறு பூசியிருந்தான். அதனைக் கண்ட வரகுணபாண்டியன், அவனைச் சிவனடியார் என்று எண்ணித் தண்டிக்காமல் விட்டுவிட்டார். நரிகள் ஊளையிட்டதைக் கேட்டு, அவனை சிவபெருமானை வாழ்த்தியதாக நினைத்து, அவைகளுக்கு உடுத்தும்படி துணிகளை வழங்கினார். கார்காலத்தில் குளத்தில் தவளைகள் அரற்றிய “அரகர” என்னும் ஓசையைக் கnடு அத் தவளைகள் சிவபெருமான் பெயரைப் பாடியதாகக் கருதிக் காசையும் பொன்னையும் அக்குளத்திலே தூவினாராம். சிவபெருமான் திருமஞ்சனத்துக்காக எண்ணெய் ஆட்ட எள்ளைக்கொண்டு வந்து காயவைத்திருந்தார்கள். ஒருவன் அந்த எள்ளை எடுத்துத் தின்றான். இந்தப்பாவஞ் செய்தவனைக் கையும் பிடியுமாகப் பிடித்துக்கொண்டுபோய் வரகுணனிடம் விட்டார்கள். இந்தச் சிவபாவத்தை ஏன் செய்தாய் என்று கேட்க, அவன், சிவனுடைய எள்ளைத் தின்றால் சிவகதி கிடைக்கும் என்று கூறினான். அப்படி யானால், உன் வாயில் இருக்கும் எள்ளை எனக்கும் கொடு என்று கேட்டாராம். |