368 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
சோழநாட்டுத் திருவிடைமருதூரில், இவ்வரசன் இருந்த போது இறந்தவனுடைய மண்டையோடு தரையில் கிடந்ததைக் கண்டு, அதனைக் கையில் எடுத்து, “இந்தப் புண்ணிய நகரத்தில் உன் தலையோடு இருக்க என்ன புண்ணியம் செய்தனையோ! என் தலை யோடும் இவ்வாறு சிவ க்ஷேத்திரத்தில் கிடக்கும்படி அருள் கிடைக்கவேண்டும்” என்று வேண்டினாராம். திருவிடைமருதூர்க் கோயிலில், ஒரு நாய் மலம் கழிக்க அதனைத் தமது கையினால் எடுத்து அப்புறப்படுத்திக் கோயிலைத் தூய்மை செய்தாராம். வேப்ப மரத்தில் வேப்பங்காய்கள், சிவலிங்கம் போன்ற உருவத்தோடு இருப்பதைக் கண்டு, அவற்றைச் சிவலிங்கமாகவே எண்ணி, அம் மரங்களுக்குப் பந்தல் அமைத்தாராம். அன்றியும், தமது தேவியைச் சிவ பெருமானுடைய திருக்கோயிலில் ஊழியம் செய்ய அனுப்பினாராம். இச்செய்திகளைப் பழைய திருவிளையாடல் புராணம் கூறுகிறது. “மிஞ்சிடை மருதர் கோயில் பதக்கணம் வரும் வீதிக்கண் அஞ்சிநாய்க் கட்டங்கண் டீதெடுத்தவர்க்கு அவனி பாதி நெஞ்சினால்கொடுப்பலென்றே நினைத்தனன் எடுப்பக்காணான் பஞ்சவன் பகுதி யில்லென்றெடுத்தனன் பரிவட்டத்தால்” “தேம்படு பழனஞ் சூழ்ந்த திருவிடை மருதினெல்லைப் பாம்பொடு டமதியஞ் சூடும் பரமனார் உருவம் என்னக் காம்பவிழ்ந் துதிர்ந்த செய்ய கனியுருக் கண்டாங் கெல்லாம் வேம்புகட் குயர்விமானஞ் சாத்தினான் வேந்தர் வேந்தன்.” “பரிந்திடை மருதர் நன்னீ ராடமுன் பரப்பும் எள்ளைக் கரந்தொரு கள்ளன் தின்னக் கண்டவர் கொடுசெலுங்கால் அருந்திய தென்னை என்ன அரன்றமர்க் கடிமை யாக வரும்பிறவியின்கண் என்றான் மன்னவனயின்றான் வாங்கி.” “சோதிசேர் மருதர் தேர்போம்வீதியில் தொழுவான் செல்லும் போதில் முன்கிடந்த பொல்லாப் புன்தலை ஓடுகண்டு நாத! இத்தலைபோல் என்தன் நாய்த்தலை ஓடும் இந்த வீதியிற்கிடக்க என்றே மிலைந்தனன் இலங்குதென்னன்.” |