372 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
உதவுகிறது. ஆகவே, சரித்திர ஆராய்ச்சிக்கு உதவாததும் தவறுகளை யுடையதுமான புதிய (பரஞ்சோதியார்) திருவிளையாடல், மாணிக்க வாசகரை அரிமர்த்தன பாண்டியன் காலத்தவர் என்று கூறுவது தவறானது. மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில் வரகுண பாண்டியனைக் கூறுவதால், அவர் அவ்வரசன் காலத்தவர் என்பதே பொருத்தமானதாகும். இந்நூலில், மாணிக்கவாசகர் காலஆராய்ச்சி என்னும் இணைப்பு காண்க. தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் காலத்திலே பதினாறு சைவ அடியார்கள் இருந்ததைக் கண்டோம். ஆகவே, அக்காலத்தில் சைவ சமயம் உயர்ந்தோங்கி இருந்ததென்பதும், பக்தி இயக்கம் நாட்டில் நன்கு வேரூன்றியிருந்ததென்பதும் தெரிகின்றன. அடிக்குறிப்புகள் 1.No. 847. S.I.I. Vol. VII. 2.நாட்டியத்தான் குடி 9. 3.பழமண்ணிப் படிக்கரை 9. 4.கருப்பறியலூர் 10. 5.நமக்கடிகளாகிய அடிகள் 9. 6.முடிப்பது கங்கை 9. 7.திருவாழ்கொளிபுத்தூர் 10. 8.நம்பி என்ற திருப்பதிகம் 9. 9.திருத்தினை நகர் 9. 10.தினைநகர் 9. 11.மறைக்காடு 9. 12.திருச்சுழியல் 9. 13.திருநாகேச்சரம் 10. 14.கோயில் 9. 15.P. 110. History of Tamil Language and Literature, 1959. 16.திருககோலக்கா 5. |