பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர் | 121 |
வானநூலையும் கற்றிருந்தார் என்பது தெரிகிறது. ஏலாதி என்பது, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை போன்று ஒரு மருந்தின் பெயர். ஏலம், இலவங்கப்பட்டை, நாகேசசுரம், மிளகு., திப்பிலி, சுக்கு என்று ஆறு வகையான சரக்குகளை மருத்துவ நூல் கூறும் அளவுப்படி ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்பட்ட சூரணத்துக்கு ஏலாதி என்பது பெயர். ஏலாதி என்னும் பெயருடைய இந்த நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஆறு பொருள்கள் கூறப்படுகின்றன. இவர் சமண சமயத்தவர். இல்லறநூல் ஏற்ற துறவறநூல் ஏயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து-நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் கணிமேதை செய்தான் கலந்து என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள். கார் நாற்பது இது நாற்பது வெண்பாக்களையுடைய நூல். இது, அகப் பொருளில் முல்லைத்திணையைக் கூறுகிறது. அலுவல் காரணமாக வெளியூருக்குச் சென்ற தலைவன் தான் கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தன் தலைவிக்குக் (காதலிக்கு) கூறிச்சென்றான். அவன் சொன்ன கார் காலம் வந்ததும் அவன் திரும்பி வராதபடியால் தலைவி கவலைப்பட்டாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள். கடைசியில் காதலன் திரும்பி வந்தான். இவற்றைக் கூறுகிறது இந்தச் செய்யுள். இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் மதுரைக் கண்ணன் கூத்தனார். பொருகடல் வண்ணன் புளைமார்பில் தார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம் கருவிருந் தாலிக்கும் போழ்து என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள். ஐந்திணை ஐம்பது அகப்பொருளைப் பற்றிய ஐந்திணைகளும் பத்துப்பத்துப் பாக்களினால் இயற்றப்பட்டதாதலின் இந்நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. இதைப் பாடியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இதன் பாயிரச் செய்யுள், |