பக்கம் எண் :

112மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

மிளகு (கறி)

சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் உணவுக்கு மிகவும் முக்கியமான பொருளாக இருந்தது மிளகு. ஆனால் மிளகு எல்லா நாடுகளிலும் உண்டாகவில்லை. சேர நாட்டிலே மலைச் சாரல்களில் (சைய மலை என்னும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்) மிளகுக் கொடிகள் வளர்ந்தன. சேர நாட்டில் வாழ்ந்த அக் காலத்துத் தமிழர் இக்காலத்து மலையாளிகளைப் போல, மிளகைப் பயிரிட்டு மிளகு உற்பத்தி செய்தார்கள். கிழக்கிந்தியத் தீவுகளாகிய சாவக நாட்டிலேயும் அக்காலத்தில் மிளகு உண்டாயிற்று. ஆனால் அந்த மிளகு சேர நாட்டு மிளகைப் போன்று சிறந்தவையல்ல. சேர நாட்டுக்கு வடக்கேயிருந்த துளு நாட்டிலும் (இப்போதைய தென் கன்னட மாவட்டம்) மிளகு உண்டாயிற்று. சங்க காலத்தில் சேர நாடும் துளு நாடும் தமிழ் பேசும் தமிழ் நாடாகவே இருந்தன. பிற்காலத்தில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழ், மலையாள மொழியாகவும் துளு நாட்டில் பேசப்பட்ட தமிழ், துளு மொழியாகவும் மாறிப் போயின. துளு நாட்டிலும் சேர நாட்டிலும், மிளகு நன்றாக விளைந்தது. மிளகு, உணவைப் பக்குவப்படுத்துவதற்கு இன்றியமையாத பொருளாக இருந்தபடி யால் அது உலகம் முழுவதும் தேவைப்பட்டது. (இக்காலத்தில் சமையலுக்கு உபயோகப்படுகின்ற மிளகாய் அக்காலத்தில் கிடையாது. அக்காலத்தில் அமெரிக்கா கண்டம் இருந்தது ஒருவருக்கும் தெரியாது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா கண்டம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அங்குத் தென் அமெரிக்காவிலிருந்து மிளகாய் கொண்டு வரப்பட்டது. இது நிகழ்ந்தது சமீப காலத்தில்தான்.) சேரநாட்டு மிளகு அக்காலத்தில் உலக முழுவதும் பேர் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தி லிருந்த யவனர்கள் சேர நாட்டு மிளகை அதிகமாக வாங்கிக் கொண்டு போனார்கள். அதனால் மிளகுக்கு யவனப்பிரியா என்று பெயர் உண்டாயிற்று. மிளகுக்குக் கறி என்றும் மிரியல் என்றும் பெயர் உண்டு. சோழ நாட்டுக்குச் சாவக நாட்டிலிருந்து மிளகு இறக்குமதியாயிற்று என்பதைப் பட்டினப் பாலையி லிருந்து அறிகின்றோம்.

சங்கச் செய்யுட்களிலே சேர நாட்டு மிளகும் மிளகுக் கொடி யும் கூறப்படுகின்றன. குடபுலத்தில் (சேர நாட்டில்) கறிக்கொடி (கறி=மிளகு) பலாமரங்களில் மேலே படர்ந்து வளர்ந்ததை நத்தத்தனார் கூறுகிறார். `பைங்கறி நிவந்த பலவின் நீழல்’ (சிறுபாணாற்றுப்படை. அடி. 43) மலைகளில் சந்தன மரங்களின் மேலேயும் மிளகுக் கொடிகள் படர்ந்து