| 166 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
தமிழ் நாட்டுக்கு வடக்கேயுள்ள வடுக தேசமாகிய கன்னட நாட்டிலும் வீரக்கற்களாகிய நடுகல் நடும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்தது. கன்னட நாட்டு வீரக்கற்களைப் பற்றி இங்கு எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சி அவற்றை இங்கு எழுதாது விடுகிறேன். அடிக்குறிப்புகள் 1. (Epi. Report. 165 of 1933 - 34). 2. (Epi. Rep. 69 of 1933 - 34). 3. Epi. Rep. 67 of 1933 -34. 4. Two Tamil Inscriptions at Ambur. E. Hultzsch. Epigraphia Indica Vol. IV, P. 189-180, Ep. Rep. 1896, P 2. 5. Kil Muthugur Inscriptions P 360. Epigraphia Indica Vol. IV. 6. Kulidikki Inscription of Vijaya Nandisvara Varman P. 110-115. Epigraphia Indica Vol. XXII 1933 - 34. 7. No. 112. S.I.I. Vol. XII. 8. Thavandram Museum stone Inscription of Maranjadaiya. P. 153-159. Travancore Archaeological Series; Vol. I. Ranakirti Tatam A South Indian Warrior of the Eighth Century, P. 146. Kerala Society Papers, Vol. I. (1928-30) 9. Three Tamil Inscriptions at Kil - Muthugur. Epigraphia Indica. Vol. IV. PP. 177-179. 10. (348 of 1921). 11. (205 of 1931 - 32). 12. (No. 471. S.I.I. Vol. VIII P. 249). 6. பெரும்படை இனி, தொல்காப்பியச் சூத்திரத்தில் பெரும்படை என்று கூறப்பட்டிருப்பதைப் பற்றி ஆராய்வோம். காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகுமரபில் பெரும்படை வாழ்த்தலென்று இருமூவகையில் கல்லொடு புணர என்பது தொல்காப்பிய புறத்தினையியல் 3ஆம் சூத்திரப்பகுதி. |