பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 181 |
கோட்டம் - சூரியன் கோவில். ஊர்க்கோட்டம் - கயிலாயநாதனாகிய சிவபெருமான் கோவில். வேற்கோட்டம் - முருகன் கோவில். வச்சிரக் கோட்டம் - வச்சிராயுதம் இருக்கின்ற கோவில். புறம்பணையான் கோட்டம் - மாசாத்தன் கோவில். நிக்கந்தன் கோட்டம் - அருகப் பெருமான் கோவில். நிலாக்கோட்டம் - சந்திரன் கோவில்). இந்தக் கோவில்கள் அந்தந்தச் சமயத்தாரால் வழிபடப்பட்டன. ஆனால், எல்லாச் சமயத்தாரும் வழிபட்டது இந்திரன் கோவில்கள். புகார்ப் பட்டினத்தில் இந்திரனுக்கு மூன்று கோவில்கள் இருந்தன. அவை வச்சிரக் கோட்டம், தருநிலைக் கோட்டம், ஐராவதக் கோட்டம் என்பன. வச்சிரம் (இடி) இந்திரனுடைய ஆயுதம். தரு (கற்பக மரம்) இந்திர லோகத்தில் உள்ள இந்திரனுக்குரிய மரம். இது நினைத்த பொருள் களைத் தரும் தெய்வத் தன்மை யுடையது. ஐராவதம் இந்திரனுடைய வாகனம். இது வெள்ளை யானை. இந்த மூன்று கோட்டங்களும் சோழன் அரண்மனைக்கு அருகில் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத் தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. நகர மக்கள், ‘வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து’ (சிலம்பு-இந்திரவிழவூர் 140-147) ‘ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்பரிப் புரவியர் களிற்றின் றொகுதியர் இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி அரசுமேம் படீஇய வகனிலை மருங்கில் உரைசால் மன்னவன் கொற்றங் கொள்கென மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட தண்ணருங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் |