182 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணக மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி’ (சிலம்பு-இந்திரவிழவூர் 157-168) இந்திரவிழாக் கொண்டாடினார்கள். நாளங்காடி காவிரிப்பூம்பட்டினம், மருவூர்ப்பாக்கம் என்றும் பட்டினப் பாக்கம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்று அறிந்தோம். இரண்டு பாக்கங்களும் ஒன்றையொன்று நெருங்கி யிராமல் விலகியிருந்தன. இரண்டு பாக்கத்துக்கும் இடைநடுவிலே தோட்டம் ஒன்று இருந்தது. அந்தத் தோட்டத்திலே நாள்தோறும் சந்தை கூடினபடியினாலே அதற்கு நாளங்காடி என்று பெயர் கூறப்பட்டது. ‘இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபரற் பகுதியின் இடைநிலை மாகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளடங்காடி’ என்று இந்த இடத்தைச் சிலம்பு (இந்திரவிழவு 59-63) கூறுகின்றது. (‘பெரிய வேந்தர் இருவர் போர் குறித்து வந்துவிட்ட பாசறை யிருப்புக்கு நடுப்பட்ட நிலம் போர்க்களமானற்போல முற்கூறிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமுமென இரண்டு கூறுபட்ட ஊர்க்கு நடுப்பட்ட பொதுநிலமாகிய நாளங்காடி; அஃது எத்தன்மைத்தாகிய நாளங்காடியெனின், நிரைபடச் செறிந்த சோலையின் மரங்களிற் கால்களே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய கொடுப்போர் கொள்வோரோதை இடையறாது நிலைபெற்ற நாளங்காடியென்க’ அடியார்க்கு நல்லார் உரை.) பட்டினப்பாக்கத்திலிருந்து மருவூர்ப்பாக்கத்துக்குசசென்ற பெரிய சாலை, இந்த நாளங்காடியின் ஊடே அமைந்திருந்தது. நாளங்காடியின் நடுவிடத்திலே நான்கு தெருக்கள்கூடுகின்ற நாற்சந்தியிலே சதுக்கப் பூதத்தின்கோவில்இருந்தது. சதுக்கப்பூதம், காவிரிபூம்பட்டினத்தின்காவல் தெய்வம் (மதுரைமா நகரத்தின் காவல்தெய்வம் மதுராபதி தெய்வமாகஇருந்ததுபோல) |