பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு183

மக்கள் சமூகத்தின் அமைப்பையும் ஒழுங்கையும் அமைதியை யும் கெடுக்கும் தீயொழுக்கம் உள்ளவரைத் தண்டித்துச் சமூகத்தின் அமைப்பை காத்து வந்தது இப்பூதம்.

தவமறைந்து ஒழுகும் தன்மையிலாளர்
அவமறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக்கைப்படுவோரெனக்
காத நான்குங் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கம்