பக்கம் எண் :

184மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

என்று சிலம்பு (இந்திரவிழவு 128-134) கூறுகின்றது.

இந்தக் காவற்பூதம், இந்திரனுடைய ஆணைப்படி சோழ மன்னனுக்கு உதவியாக நகரத்தைக் காவல் செய்ததாம். இதனை,

வெற்றிவேன் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனத்
தேவர்கோமான்ஏவலிற் போந்த
காவற்பூதத்துக்கடைகெழு பீடிகை

என்றுசிலம்பு(இந்திரவிழவூ 65-77) கூறுவது காண்க.

மருவூர் மருங்கின் மறங்கொள்வீரரும்
பட்டினமருங்கிற் படைகெழு மாக்களும்

ஏனைய நகரமக்களும் சதுக்கபூதம்என்னும்தெய்வத்தைப் பயபக்தியுடன்வழிபட்டார்கள்.

நாளங்காடிக்கு வடக்கே உவவனம் என்னும்பௌத்தப்பள்ளி ஆராமம் இருந்தது அந்தஆராம உவ வனத்திலே கண்ணாடியால் அமைந்த பளிக்கறை மண்டபமும் அதனுள் புத்தபாத பீடிகையும் இருந்தன என்று ‘மணிமேகலை’ யினால் அறிகிறோம். (மணி 3: 62-66., 4: 87-88., 5: 95-97.)

துறைமுகம்

காவிரிபூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கத்துத் தெற்கே, காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்திலே பூம்புகார்த் துறைமுகம் இருந்தது. அந்தத் துறைமுகம் ஆழமும் அகலமும் உடையதாக, மரக்கலங்கள் பாய்களைச் சுருட்டாமலே உள்ளே வந்து தங்குவதற்கு ஏற்றதாக இருந்தது.

‘கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅ
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே’

என்று (புறம் 30) உறையூர் முதுகண்ணனார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியின் புகார்த்துறை முகத்தைப் பாடுகிறார்.

(‘பாய் களையாது பரந்தோண்டாது’ என்றதனால்’ துறை நன்மை கூறியவாறாம். பழைய உரை.)