பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 185 |
இந்தத் துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய் (கப்பல்)கள், கம்பங்களில் கட்டப்பட்ட யானைகள் அசைந்து கொண்டிருப்பது போல, துறைமுகத்தில் அசைந்துகொண்டிருந்தன என்று கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார். ‘வெளில் இளக்கும் களிறு போலத் தீம்புகார்த் திரை முன் றுறைத் தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை மிசைக் கூம்பின் அசைக் கொடியும்’ என்று அப்புலவர் பட்டினப்பாலையில் (172-175 அடி) கூறுகிறார். மருவூர்ப் பாக்கத்துக்குத் தெற்கே புகார்த்துறை முகம் இருந்தது என்று கூறினோம். மருவூர்ப்பாக்கத்தின் தெற்கே ஆற்றங்கரையிலே, துறைமுகத் தின் அருகிலே பண்டகசாலை இருந்தது. இங்கு, ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’ (பட்டினப்பாலை (185-193) என்று பட்டினப்பாலை கூறுகிறது. ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களுக்குச் சோழ மன்னனுடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்டுச் சங்கம் பெறப்பட்டது. இதை, ‘நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி அருங்கடிப் பெருங்காப்பின் |