| 186 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி’ என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் (பட்டினப்பாலை 129-135) கூறுகிறார். துறைமுகத்துக்கு அருகிலே வெள்ளிடைமன்றம் என்னும் கோவில் இருந்தது. அம்மன்றத்துத் தெய்வம், துறைமுகத்துப் பண்டகசாலையில் இருந்த பொருள்களை ஒருவரும் களவு செய்யாதபடி காத்து வந்ததாம். ‘வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த வெண்ணுப் பல்பொக் கடைமுக வாயிலுங் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போர் உளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்த லீயா துள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றம்’ என்று இந்த மன்றத்தைச் சிலப்பதிகாரம் (இந்திரவிழவூர் 111-117) கூறுகிறது. துறைமுகத்துக்கு அருகிலே கலங்கரை விளக்கம் அமைந்திருந் தது. வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் இராக்காலத்தில் கடலிலே திசைமாறிப் போகாமல் துறைமுகத்தைக் காட்டுவதற்கு இந்தக் கலங் கரை விளக்கம் உதவியாக இருந்தது. இதை ‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ என்று சிலம்பு (கடலாடு காதை 141) கூறுகிறது. (‘கலங்கரை விளக்கம்’ என்பதற்குத் ‘திக்குத் குறி காட்டிக் கலத்தை அழைக்கிற விளக்கம்’ என்று அரும்பத உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார். ‘பாடை வேறு பட்டதேயத்து நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு’ என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்.) கடைச்சங்க காலத்திலே, தொண்டை நாட்டின் கடற்கரைத் துறை முகப்பட்டினம் ஒன்றிலே இருந்த ‘உரவுநீரழுவத்து ஓடுகலம் கரையும்’ விளக்குக் கூண்டைக் கூறுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில், |