பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 193 |
கப்பல் வாணிகராக இருந்தார் என்று அறிகிறோம். ஆகவே, கடைச்சங்க காலத்திலே பூம்புகார்ப் பட்டினம் கடல்கொள்ளப்பட்டது என்று கருதுவது தவறு. மருவூர்ப்பாக்கம் மிகப்பிற்காலத்தில் கடலில் முழுகியிருக்கக் கூடும். தமிழ்நாட்டின் கிழக்குக்கரையூர்கள் சில, கடல் நீரோட்டத்தின் காரணமாக அழிந்தும் சிதைந்தும் போயின. அவ்வப்போது புயல் காற்றினால் வெள்ளச் சேதமும் நேரிட்டன. இப்போது சிறு தீவாக உள்ள இராமேசுவரம் 400 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்துடன் இணைந்திருந்தது. பாண்டி நாட்டில் இருந்த பேர்போன கொற்கைத் துறைமுகம், பிற்காலத்தில் உள்நாட்டு பட்டினமாக மாறிவிட்டது. அங் கிருந்து கடல் ஐந்து மைல் அகன்று போய்விட்டதால், கொற்கைத் துறை முகம் பிற்காலத்தில் உள்நாட்டுப் பட்டினமாகிவிட்டது. இவ்வாறு பல மாறுபாடுகள் கடற்கரையோரங்களில் நிகழ்ந்து வந்தது உண்மையே. ஆனால், கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப் பெருக்கினால் அழிந்துவிட்டது என்பது உண்மையன்று; அது காவியப் புலவனின் கற்பனையே. ஆனால் அடிக்கடி உண்டாகிற வெள்ளப் பெருக்கினால் காவிரிப்பூம்பட்டினம் துன்புற்றதுபோல, மணிமேகலை காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப் பெருக்கினால் துன்புற் றிருக்கலாம். அவ்வெள்ளப் பெருக்கினால் அதிக சேதமும் ஏற்பட்டிருக் கலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதி கடலில் மறைந்தது பிற்காலத்திலாகும். பிற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தின் கிழக்குப் பகுதி கடலில் மறைந்தது உண்மையே. பிற்காலத்தில் நிகழ்ந்த இதை மணிமேகலை காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதுவது தவறு. காவிரிப்பூம்பட்டினத்துக்குக் காகந்தி என்றும் ஒரு பெயர் உண்டு என்று கூறினோம். திருவேங்கடத்துக்கு அருகில் கிழக்குக் கரையிலே காகந்தி என்று ஒரு நாடு இருந்தது. அது பிற்காலத்திலே கடலில் மூழ்கிப் போயிற்று. அதைக் கடல் கொண்ட காகந்தி என்று சாசனங்கள் கூறு கின்றன. அப்பகுதியை தெலுகு சோடர் (தெலுங்குச் சோழர்) என்பவர் அரசாண்டிருந்ததும் அங்கும் காகந்தி இருந்ததும் ஆராய்ச்சிக்கு உரியன. அந்தக் காகந்தி பவத்திரிக் கோட்டத்தில் இருந்தது. பவத்திரிக் கோட்டத்தின் ஒரு பகுதி கடலில் முழுகி இப்போது பழவேற்காட்டு ஏரி என்று பெயர் பெற்றிருக்கிறது. |