பக்கம் எண் :

194மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

அடிக்குறிப்புகள்

1. சோழன் கரிகாற் பெருவளத்தானின் காவிரிப் பூம்பட்டினத்தைப் பட்டினப் பாலையில்பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே அச்சோழனின் உறவினனாகிய தொண்டைமான் இளந்திரையன் மீது பெரும் பாணாற்றுப்படையைப் பாடினார். தொண்டை நாட்டுத்துறைமுகத்திலிருந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பைக் கூறியது போல காவிரிப் பூம்பட்டினத்தின்கலங்கரை விளக்கின் அமைப்பை இவர் பட்டினப் பாலையில் கூறவில்லை. ஆயினும் பெரும் பாணாற்றுப்படையில் கூறப்பட்ட கலங்கரை விளக்கின் அமைப்பைப் போன்றே பூம்பூகார்ப்பட்டினத்தின் கலங்ரை விளக்கம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதலாம்.

2. சுடுகாட்டில் இருந்த வெள்ளிடை மன்றத்தையும் துறைமுகத்துப் பண்டகசாலைக்கு அருகில் இருந்த வெள்ளிடை மன்றத்தையும் ஒன்று எனக் கருதுவது கூடாது. இது வேறு அது வேறு சுடுகாட்டில் இருந்த,

பிணத்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றம்

வேறு பண்டகசாலைக்கு அருகில் இருந்த, பண்டங்களைக் களவாடுவோரை வெளிப்படுத்திய, `உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றம்’ வேறு. இதனை மணிமேகலை சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை 53, 83, 85, 87, 89, 91 அடிகளால் அறியலாம்.

3. சக்கர வாளம் என்பது பௌத்த சமயத்தாரின் `பிரமாண்டம்’ சக்கரவாளத்தின் விவரத்தை `மணிமேகலை’ சக்கரவாளக் கோட்ட முரைத்த காதை 176 - 183 அடிகளிலும், 192 - 202 அடிகளிலும் காண்க. பௌத்த நாடாகிய இலங்கைத் தீவிலே பொலநறுவை என்னும் புலத்தி நகரத்திலே ஒரு பாறைக் கல்லிலே சக்கர வாளத்தின் உருவப்படம் வரையப்பட்டிருக்கிற தென்று இலங்கை ஆர்க்கியாலஜி அறிக்கையொன்று கூறுகிறது.