பக்கம் எண் :

202மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

மதுரைமா நகரத்தின் கோட்டைவாயிலை யவன வீரர்கள் காவல் புரிந்தனர்.

‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராதுபுக்கு’

(சிலம்பு, ஊர்காண். 66 67)

அரண்மனை:

நகரத்தின் நடுமையத்தில் பாண்டிய மன்னனுடைய அரண்மனை, தாமரைப்பூவின் நடுவில் உள்ள ‘கொட்டை’ அல்லது ‘பொகுட்டு’ப் போல அமைந்திருந்தது. இதனை ‘அரும் பொகுட்டனைய அண்ணல் கோவில்’ என்று பரிபாடற் செய்யுள் கூறுகிறது.

வீதிகள்:

அரண்மனையிலிருந்து வீதிகள் எட்டுத் திசைகளிலும் அமைந் திருந்தன. அரண்மனையைச் சுற்றிலும் வீதிகள் அமைந்திருந்தன. வீதிகளின் அமைப்பு தாமரைப் பூவின் இதழ்களைப் போல அமைந் திருந்தது. கோட்டை வாயிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாகச் சென்ற வீதி அரண்மனைப் பக்கமாக அமைந்திருந்தது. அது போலவே தெற்கிலிருந்து வடக்குப் புறமாகச் சென்ற வீதியும் அரண்மனைப் பக்கமாகச் சென்றது. வடக்குப் பக்கத்தில் மதிலுக்கப்பால் வைகையாறு இருந்தபடியால், அவ்வீதி வடக்குவாயிலோடு நின்று விட்டது.

புறமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையில் இருந்த வீதிகள் புறஞ்சேரி என்று பெயர் பெற்றிருந்தன. அங்குப் பெரும்பாலும் ஆயர்குல மக்கள் வாழ்ந்திருந்தனர்.

வயிரம், மரகதம், முத்து, மாணிக்கம், பவழம் முதலிய நவமணிகள் விற்கும் வீதியும், வெள்ளி பொன் நகைகள் விற்கும் வீதியும், அறுவை (ஆடை) கூலம் (தானியம்) முதலியவை விற்கும் வீதிகளும் பலவகை மக்கள் வாழ்ந்த வீதிகளும் இருந்தன. நாளங்
காடியும் அல்லங்காடியும் இருந்ததை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. (அடி 430 544). ‘வையங் காவலர் மகிழ்தரு வீதியும்’ (ஊர்காண் 145). ‘எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்’ (௸ 167). ‘அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்’ (௸ 179), ‘நறுமடி செறிந்த அறுவை வீதியும்’ (௸ 207), ‘கூலங் குவித்த கூல வீதியும்’ (௸ 211),