38 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
கூறுகிறார் (அகம், 400: 9-16). அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் தம்முடைய செய்யுள்களில் குதிரை வண்டிகளைக் கூறுகிறார். (அகம் 244: 12-13, 344: 7-11, 314: 8-10). மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார் தம்முடைய செய்யுளில் குதிரை வண்டியைக் கூறுகிறார் (அகம், 334: 11-15) மருதன் இளநாகனாரும் நான்கு குதிரை பூட்டிய வண்டியைக் கூறுகிறார் (அகம், 104-3) மாங்குடி மருதனாரும் (குறும், 173: 1-3) புல்லாளங் கண்ணியாரும் (அகம் 154: 11-13) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனாரும் (அகம் 80: 8-13) அரிசில் கிழாரும் (புறம் 146:11) இடைக்காடனாரும் (அகம், 194: 17-91) குதிரை வண்டிகளைத் தம்முடைய செய்யுட்களில் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அக்குதிரை வண்டிகள் வாணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளாகப் பயன்படுத்தப்படவில்லை. மாடும் மாட்டு வண்டியும் வாணிகப் பொருள்களைக் கொண்டு போவதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டு வண்டிகளில் வாணிகப் பண்டங்களை ஏற்றிக் கொண்டுபோனார்கள். வாணிகர் பலர் ஒன்றாகச் சேர்ந்து பொருள்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். இதற்கு வாணிகச் சாத்து என்பது பெயர். அவர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஏனென் றால் காட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரர் வந்து பொருள்களைக் கொள்ளை யடிப்பதும் உண்டு. கொள்ளைக்காரர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தினர் வீரர்களையும் தம்முடைய சாத்துடன் அழைத்துச் சென்றார்கள். கழுதை வாணிகர், வாணிகப் பொருள்களை ஊர் ஊராகக் கொண்டு செல்வதற்குக் கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். பாறைகளும் குன்றுகளும் உள்ள நாடுகளுக்குச் செல்லக் கழுதைகள் முக்கியமாகப் பயன்பட்டன. கழுதைகளின் முதுகுகளின் மேல் சரக்குப் பொதிகளை ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்து (வணிகக் கூட்டம்) ஒன்று சேர்ந்து போயிற்று. எல்லைப் புறங்களில் வழிப்பறிக் கொள்ளைக்காரர் வழி பறித்துக் கொள்ளையிடுவதும் உண்டு. அவர்களை அடித்து ஓட்டுவதற்கு வாணிகச் சாத்தர் வில் வீரர்களையும் வாள் வீரர்களையும் துணையாக அழைத்துச் சென்றார்கள். வாணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் நாள் நிமித்தம் பார்த்து நல்ல |