பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 39 |
வேளையில் புறப்பட்டனர். வழிப்பறிக் கொள்ளைக்காரர் இவ்வீரர் களையும் கொன்று பொருள்களைக் கொள்ளையடிப்பதும் உண்டு. ‘விளரி பரந்த கல்னெடு மருங்கின் விளரூன் தின்ற வீங்குசிலை மறவர் மைபடு திண்டோள் மலிர ஆட்டிப் பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பு.’ (அகம், 89: 9-14. மாங்குடி மருதனார்) (பொறைமலி - பாரம் நிறைந்த. நெடுநிறை - நீண்ட வரிசை) ‘நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றை புறம்நிறைப் பண்டத்துப் பொறை’ (அகம், 343: 12-13. மருதனிளநாகனார்) (ஏற்றை - ஆண் கழுதை) பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப் பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வணிகச் சாத்தர் ஊர்ப்பயணஞ் சென்றனர். இடைவழியில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்தினார்கள். சுங்கச் சாவடிகளில் வில் வீரர்கள் காவல் இருந்தனர். ‘தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு’ (பெரும்பாண், 77-82, கடியலூர் உருத்திரங்கண்ணனார்) (மிரியல் - மிளகு) கிழக்குப் பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை, மூட்டைகளாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர். ‘அணங்குடை முந்நீர் பரந்த செருவின் உணங்குதிறம் பெயர்த்த வெண்கல அமிழ்தம் |