| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 257 |
14. ன் கொண்டு பலி 15. சை ஊட்டினா 16. ல் நாழ்வாய் நா 17. ழி நெய் முட்டா 18. மை அரிச்சிப் 19. பார் கை விலேய் 20. குடுத்து திருவி 21. ளக் கெரிப் போ 22. மனோம் அன் 23. பில் சகையோ 24. ம் இது பன்மாஹே 25. ஸ்வர ரக்ஷை 19-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா, திருக்கோடிக்காவல், திருக்கோடீசுவரர் கோயில் தெற்குப்புறச் சுவர் சாசனம். நந்திப் போத்தரையரின் 19-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சாசனம், திருக்கோடிக்கா சிறுநங்கை ஈஸ்வரத்துக் கோயிலில் திருவிளக்கு எரிப்பதற்காக ஆழி சிறியன் என்பவர் 100 கலம் நெல் தானம் செய்ததைக் கூறுகிறது. திருக்கோடீசுவரர் என்பதன் பழைய பெயர் திருக்கோடிக்கா சிறு நங்கை யீசுவரம் என்பது தெரிகிறது. இச்சாசனம், பழைய சாசனத்தைப்படி எடுத்துப் பிற்காலத்தில் எழுதப்பட்டது. சாசன வாசகம்26 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. இதுவும் 2. மொரு பழங் கற்படி யா 3. ண்டு நந்திப் போத்தரை 4. யற்கு பத்தொன்ப 5. தாவது திருக்கோடிக்கா 6. வில் சிறுநங்கை ஈஸ்வரத் 7. து மஹாதேவர்க்கு திருவிளக்கி 8. னுக்கு ஆழிசிறியன் குடுத்த நெல் |