பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 271

76. நூற்றெண்பதின் கலம்
77. இப்பரிசு நியதி
78. ப் படி முட்டாமை
79. நெடுங்கால முஞ்செ
80. லுத்துவதாக வைத்தா
81. ர் ஸ்ரீ வரகுண மகா ராஜர்.

நந்திபோத்தரையர் மகாதேவியர் மாறம்பாவையரின் சாசனங்கள்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுக்கா, திருச்சென்னம் பூண்டி, சடையார் கோவிலில் ஒரு தூணில் உள்ள சாசனம்.

சாசன வாசகம்44

1. ..............த்தி.......
2. முடி மஹா தேவர்க்கு மாசிமக
3. ந்திருவிழா வெடுப்பதற்கு ச
4. ந்திராதித்தவற் பல்லவதிலக
5. குலத்து நந்திப் போத்தரை
6. யர் மஹாதேவியாரான அடிகள்
7. கண்டன் மாறம் பாவையார் வை
8. த்த பொன் பதினேழு கழஞ்செ
9. கால் இப்பொன்னில் முதல் விழா
10. எடுக்கு நான்று எழுகழஞ்சு பொ
11. ன்னா லோராண்டில் கழஞ்சின் வா
12. ய் கலவரிசியாக எழுகல வரிசியா
13. ல் திருமேனியாட நெய் பால் தயிர்
14. ஐஞ்ஞாழிச் செதும் இளநீர் இருபது
15. அகநாழிகை பரிபார மடங்கத் திரு
16. வமிர்தரிசி முக்குறுணியும் திருவ
17. மிர்துந் திருவிளக்கும் நெய்யா
18. ழி தயிர் இருநாழி அமிர்து கறி
19. சற்கரை வாழைப்பழம் அடைக்கா
20. யிருபதும் இப்படி யாராதிப்பிக்கவும்
21. மிக்க வரிசி கொண்டு பிராமணருமடி
22. கள் மாரு முண்டு திருவிழாவெடுத்து