தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 147 |
செக்குபந்தி=வரம்பை வரையறுத்தல், எல்லையைத் தீமானித்தல். டாணா=கீழ்ப்பட்ட போலீஸ் நிலையம். தண்டா=குழப்பம், தடை, இடையூறு. தபால்=அஞ்சல். துக்கடி=பிரிவு, மாவட்டம். பட்வாடா, பட்டுவாடா=பணம் முதலியவற்றைப் பகிர்ந்து கொடு. பர்த்தி=ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை வைத்தல். நிரப்புதல். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே நம்மவர் அச்சுயந்திரம் நிறுவி அச்சுப் புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார்கள் என்று கூறினோம் அச்சு யந்திரம் ஏற்பட்டதன் காரணமாகச் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த முஸ்லிம் தமிழ்ப் புத்தகங்களின் பட்டியலை (நான் அறிந்தவரையில்) கீழே தருகிறேன். இது முழுப் பட்டியலாக இருக்க முடியாது. சில புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும். கிடைத்த பட்டியலும் மறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்பட்டியலைத் தருகிறேன். ஆண்டு | நூலின் பெயர் | ஆசிரியர்,பதிப்பாசிரியர் | | | பெயர்கள் | 1862 | தொழுகை அகீதத்து | | | விளக்கம் (மவுல்வி | | | அப்தல்லா அவர்கள் | | | ஹிந்துஸ்தானியில் | மகுதூ முகம்மது. | | எழுதிய ஹகீதத் | திருநெல்வேலிப் | | அல்ஸதாத் என்னும் | பேட்டை. | | நூலைத் தழுவி எழுதப் | | | பட்டது) | | 1862 | தொழுகை அசீகத்து | ஆமூர் வாலைபாவா | | விளக்கம். | சாகிபு, சென்னை. | 1868 | கேசாதிபாதமாலை. | நாகூர் முகமது புலவர். | 1869 | ராசூல்கூல் சண்டைகள். | குஞ்சுமூசு லப்பை ஹாஜி | | | | அலிம் புலவர். |
|