| 128 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| நாரா: | 105 | என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. | | | 110 | புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி | | | 115 | யன்ன தவள்கருத் தாமோ? | | நட: | | அறியாய்! | | | | புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் | | | 120 | காதகர்; கடையர்; கல்வியில் கசடர் | | நாரா: | | ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. | | நட: | | திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. | | | 125 | தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். |
உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் - உறுதி. ஊழிக் கனல் - யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் - வைக்கோலாக. மாதரார்- பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலை காரர். சலனம் - அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது - அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள். |