236 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து | | | “ வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும் செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!” எனப்பல | | 75 | கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி... | ஜீவ: | | கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும் உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ! ஓ! | | | (படைகளை நோக்கி) | | | வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே! கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம் | | 80 | நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே! தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும் தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் | | 85 | துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து, புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் | | 90 | களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை. அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்! முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா! | படைகள்: | | தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! |
தேர்கள் மலைகளுக்கு உவமை. கொடிஞ்சி நெடுந்தேர் - கொடிஞ்சி என்னும் உறுப்பையுடைய பெரிய தேர். நாற்படை - நான்கு விதமான படை. அவை, யானைப் படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படை என்பன. யாக்கை - உடம்பு. பாண்டி - பாண்டி நாடாகிய தாய். முதுநதி மாதா - தாம்பிரவர்ணி ஆறாகிய தாய். |