ஜீவ: | | ஒருதுளி யெனும்நீர் உண்டுளீர் ஆயின் |
| 95 | கருதவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை. |
| | “ மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி, இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக! |
| 100 | அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடும் அளவும்!” என்றன்றோ வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம் |
| 105 | பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் ! |
படைகள்: | | ஜே! ஜே! |
ஜீவ: | | விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? |
படைகள்: | | தமிழ்மொழிக்கு ஜே! ஜே! |
ஜீவ: | | பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி |
| 110 | நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக் கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட |
சோரி - இரத்தம். பொன்றிடும் அளவும் - சாகிற வரையில். விந்தம் அடக்கியோன் - விந்திய மலையைத் தாழச் செய்தவனாகிய அகத்தியன். முற்காலத்தில் விந்திய மலை உயர்ந்து இறுமாப் படைந்திருந்தது என்றும், அவ்வழியாக வந்த அகத்திய முனிவர் அதன் தலையில் தன் கையை வைத்துச் சிறிதாக அடக்கினார் என்றும் புராணம் கூறம். தந்தநற்றமிழ்மொழி - அகத்தியன் முதலில் இலக்கணம் எழுதி அமைக்கப்பட்ட தமிழ்மொழி. கிழமை - உரிமை. ஓத்தறுத்து - தாளம் பிடித்து.