பக்கம் எண் :

238மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  115வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம்
“ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே
தோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்?
படைகள்: சிச்சீ!
ஜீவ:  பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன்
படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று
 120“அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு!
படைகள்: ஹே! ஹே!
ஜீவ:  கோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன
நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்?
படைகள்: சிச்சீ! சிச்சீ!
ஜீவ:  சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும்
திருவனை யார்களும் சேய்களும் கொண்ட
 125வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும்
பாஷாபி மானமும், தேசாபி மானமும்
பொருளெனக் கருதா தருணிறை நுமது
தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல்
ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே
 130நிந்தைவஞ் சியர்செய வந்தநும் கோபம்
முற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள்
உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக்
குறுமபால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே!
உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சீதம்.
 135பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம்.
அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும்


சிறுகால் - இளங் காற்று. பொதிகை மலையிலிருந்து தென்றற் காற்று வீசுகிறது என்பது கவி மரபு. உயிர்ப்பு - மூச்சு. திரு அனையார் - இலக்குமி போன்ற மனைவியர். உறுகண் - துன்பம். கேண்மை - உரிமை. வஞ்சியர் - வஞ்சி நாட்டார், சேரநாட்டவர். அரி - சிங்கம். சீதம் - குளிர்ச்சி. செந்தழல் ஓமத்தீ.