240 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! | | 165 | உதும்பர தருவில் ஒருகனி அதனுட் பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப் | | 170 | பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் | | 175 | டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் | | 180 | சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம், உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே | | 185 | எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். | படைகள்: | | இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! |
உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் - கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை. அடி 167. இவ்வடியுடன், ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று’ என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக. அழுக்காறு - பொறாமை. சேமம் - பாதுகாவல். புல்லியர் - இழிந்தவர். |