பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்241

ஜீவ:  குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு
சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற்
பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை.
படைத்தலைவர்:  இல்லையெம் இறைவ! இந்நா டதனுள்
இல்லையத் தகையர்.
யாவரும்: இலையிலை! இலையே!
ஜீவ:  நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய
நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய
மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும்
 195மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய
இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும்
ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று
ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே.     2
படைவீரர்: மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே!
யாவரும்: இளவரசிக்கு ஜே! ஜே! ஜே!
  (குறளடி வஞ்சிப்பா)
ஜீவ:  நந்தாய் தமர் நங்கா தலர்
நஞ்சேய் பிறர் நந்தா வுறை
நந்தேய மேல் வந்தே நனி
நொந்தாழ் துயர் தந்தே இவண்
நிந்தா நெறி நின்றா ரிவர்
தந்தா வளி சிந்தா விழ,
அடிப்போ மடல் கெடுப்போ முகத்
திடிப்போங் குட லெடுப்போ மிடுப்


விஜயலக்குமி - வெற்றி மடந்தை. தமர் - சுற்றத்தார். நந்தா - கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் - பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ. அடல் - வலிமை.