பக்கம் எண் :

242மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  பொடிப்போஞ் சிர முடைப்போம் பொடி
பொடிப்போம் வசை துடைப்போ முயிர்
குடிப்போம் வழி தடுப்போம் பழி
முடிப்போ மினி நடப்போம் நொடி,
எனவாங்கு,
பெருமுர சதிரப் பெயருமின்
கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே.
  (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட)
  (கலித்தாழிசை)
படைப்பாணர்:  தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச்
சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்!
சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல்,
இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே.     1
படைகள்:  ஜே! ஜே!
பாணர்:  மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிஜயை
உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்!
உறைவிடமா? இவர்வாளென்றோடிடீர் ஆயினினி
மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே.     2


பெயருமின் - புறப்படுங்கள். உருமு என ஆர்த்து - இடி போல ஆரவாரித்து.

கலித்தாழிசை 1. ஊதும் இந்தச் சின்னம் - ஊதுகின்ற இந்த எக்காளம். சயிக்கும் - வெல்வான். எமன் - எம் மன், எங்கள் அரசன் (இடைக் குறை). தெய்வீர்காள் - பகைவர்களே. சின்னமதி - சிற்றறிவு. இன் உணவு - இனிய சாப்பாடு. இசைத்துளோம் - சொன்னோம்.

கலித்தாழிசை 2. வயவர் - வீரர். புயம் மேவி - தோளில் தங்கி. ஜயை - வெற்றி மடந்தை, ஜயலட்சுமி. இவர்வாள் - ஏறி இருப்பாள்.