| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 243 |
| படைகள்: | | ஜே! ஜே! | | பாணர்: | | ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. 3 | | படைகள்: | | ஜே! ஜே! |
(படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக) நான்காம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
3-ஆம் அடி: உறைவிடமா - வெற்றி மடந்தை வாழும் இடமா, விஷம் இருக்கும் இடமா. இவர்வாள் - ஏறி இருப்பாள், இவர்களுடைய வாள். மறலி - யமன். வழங்கினோம் - சொன்னோம். கலித்தாழிசை 3. ஒல்லும் - பொருந்தும். முதல் இரண்டடிகளின் கருத்து: உறையிலிருந்து உருவிய வாள் வெற்றி பெற்றால் அல்லாமல் மீண்டும் உறையில் செல்லாது. அதாவது, சமாதானப் பேச்சு இனி கிடையாது. இல்லவர் - மனைவியர். இற்றது - அறுந்தது. |