| 2-ம் படை | | பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன், |
| | 20 | சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால். |
| 3-ம் படை: | | கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு. |
| | 25 | கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து... |
| | | (வாய்மடித்துப் பற்கடிக்க) |
| 4-ம் படை | | வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள். பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம் |
| | 30 | நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன். சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம். |
| 3-ம் படை: | | விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும் நடுநிசி ஆயினும் அடுகள முழுவதும் தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும் |
| | 35 | நாடி யவன் தலை நசுக்கி மிதித்து வாயிடை நெடுவேல் இறக்கி... |
| முதற் படை: | | சீ! சீ! |
| | | சேவக னாநீ! செப்பிய தென்னை! யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க! |
சடையன் - குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி. வகிர்ந்து - கீறி, பிளந்து. ஒன்றார் - சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் - இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள்.