| 3-ம் படை: | | போ! போ!. |
| | 40 | பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ அறிகுவை. |
| முதற் படை: | | யாரா யினுமென்? |
| | | பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம் கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம் |
| | 45 | மாதா இவ்வயின் மகாநா டிதுவே. ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் நம்மையும் இகழ்ந்திவ் நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம் தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத் |
| | 50 | துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும் |
| | 55 | சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப் பலவாம் தமது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம். |
| | | (நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர) |
| 2-ம் படை | | பாரும்! பாரும்! நாரா யணரிதோ... |
| நாராயணன் | | உன்பெயர் முருக னன்றோ? |
| முதற் படை: | | அடியேன். |
குரோதம் - கோபம், பகை. இவ்வயின் - இவ்விடத்தில். உவப்போடு - மகிழ்ச்சியோடு. இழுக்கு - குற்றம். உன்னுதி - நினைப்பாயாக. சுதேச அநுராகம் - தன் நாட்டின்மேல் அன்பு.