பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்247

4-ம் படை என்பெயர் சாத்தன். சுவாமி!
நாரா:  ஓகோ!
   எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்?
முதற் படை பத்தைஞ் றுளர். மெத்தவும் உத்தமர்.
மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம்
தகுதிக் கேற்ப தன்றிக் காவல்.
நாரா: 65பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற்
றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும்
சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச்
செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும்
திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு.
2-ம் படை வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல்
நாணமும் நோவுமாம் நாரா யணரே !
நாரா: வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ!
அப்படி யேதான் ஆயினும் நமக்குக்
கைப்படு கடமையே கடமை...
  முருகா!
 75எத்தனை பேரால் ஏலுமிக் காவல்?
முதற் படை நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி.
நாரா: அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின்
இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல்
ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக்
 80காட்டுதி எனக்கு.
முதற் படை: காட்டுவன் ஈதோ!
  (அணிவகுத்துக் காட்ட)
நாரா: (தனதுள்)


வாயில் -கோட்டை வாயில், திறத்தார்-வலிமையுள்ளவர். புரையற்றோர்-குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும்.