பக்கம் எண் :

248மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  நல்லனித் தலைவன். வல்லவர் இவரும்.
முதற் படை ஈதோ நின்றனர்!
  (காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி)
நாரா: போதுமோ இவர்கள்?
முதற் படை:  போதும்! போதும்!
காவற் படைகள் போதுமே யாங்கள்...
நாரா: எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர்
 85பண்ணும் தவறுநம் பாலாய் முடியும்.
காவற் படை:  தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ!
நாரா: தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க
மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?
காவற் படை:  மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல்.
நாரா: 90சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல்.
பரிமற் றையர்க்கெலாம் உளவோ?
3-ம் படை: ஓகோ!
4-ம் படை பெரியதென் பரிபோற் பிறிதிலை.
நாரா: காணுதும்.
அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா!
மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான்
 95வைத்துள படையும் அழைத்திப் புறநீ
நொடியினில் வருதி.
முதற் படை: அடியேன், அடியேன்.

ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை.