பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்249

  (முதற்படைஞன் போக)
நாரா: ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்.

(கோட்டைமேல் உலாவி நின்று)

  (தனதுள்)
  அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன.
வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ?
 100ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா!
முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும்.
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ!
 105வறிதாக் கினையே வாளா அனைத்தும்
அறியா தொருவனை யமைச்சா நம்பி!
இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை?
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?
 110வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத்
தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே;
சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ?
கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்?
 115அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை
ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை
கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்?
வருவது வருக! புரிகுவம் நன்மை.
  (2-ம் படைஞனை நோக்கி)
  முருகன் வரவிலை?
2-ம் படை: வருவன் விரைவில்
நாரா: 120அதுவென் ஆ! ஆ!


ஆம்பொழுது - வேண்டியபோது. வாம்பரி - தாவி ஓடுகின்ற குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் . வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல்.