பக்கம் எண் :

250மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

2-ம் படை: ஆ! ஆ! அறியோம்!
நாரா: பலதே வன்படை அலவோ?
2-ம் படை: ஆம்! ஆம்!
நாரா: மன்னவன்?
2-ம் படை: நடுவே.
நாரா: வலப்புறம்?
2-ம் படை:  குடிலன்.
நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்?
2-ம் படை: ஏதோ!
நாரா: வருவது முருகன் போலும். முருகா!

(முருகன் வர)

 125வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம்,
  (படைவீரரை நோக்கி)
  இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும்.
இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்!
முதற் படை வந்தனர் ஈதோ மற்றைய வீரரும்.
நாரா: தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில்
 130வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம்.
இருபுறம் காக்குதும், வருகவென் அருகே!
  (முருகன் காதில்)
  குடிலனை நம்பலை.
முதற் படை: அடியேன் அறிவேன்.
நாரா: அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை!
வம்மின் வீரரே! வம்மின்!
 135உம்வயின் உளதுநம் செம்மல துயிரே.     1

(யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல)

நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் -அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் - அரசனுடைய உயிர்.