பக்கம் எண் :

286மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

ஜீவ: இதுபோ லில்லை அடிகள் செய்யும்
  120உதவி. தமியேற் குளதுயர் இதுவே;
கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம்.
அருளுதி காக்கும் உபாயம்
இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே.
சுந்தர: நல்லது! கேட்டி! சொல்லுதும், உரியநீர்
 125விட்டான் முதலையும், விரும்பிய திலகப்
பட்டாற் களிறும் பலமில ஆகி
விடுமென அறிந்த கெடுவினை யாளர்
தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி
இடமது பெயர்ந்துழி. எடுத்தவெவ் வினைக்கும்
 130கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும்,
அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட்
கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி
தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை
அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி,
 135சதமென நம்புமிச் சாலி புரமும்,
அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும்,
அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை
மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே.
ஜீவ: தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா
 140றாவதும் உளதோ? ஆ! ஆ! அடிகாள்!
வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும்
முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும்.
பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது
திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே!


அடி 124 - 126. “நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும் புனலின், நீங்கின் அதனைப் பிற” என்னும் திருக்குறளின் கருத்தை விளக்கு கிறது. அயர்ந்து - மறந்து. சாலிபுரம் - நெல்வேலி, திருநெல்வேலி. சாலிபுரம் என்பதற்குத் திருநெல்வேலி என்றும், உடம்பு என்றும் இருபொருள் கொள்க. புலப் படை - பகைப்புலத்துப் படை என்றும், ஐம்புலப்படை என்றும் இரு பொருள் கொள்க. மாபதி - மதுரை நகரம் என்றும், பரம் பொருளாகிய கடவுள் என்றும் இருபொருள் கொள்க.