பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்323

   கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை
மடமையே ஆயினும் மறுக்கலை மணியே!
மனோ: பேதைமை அன்றோ ஓதிய சபதம்?
 160ஏதிது வாணி! என் மணம் தனக்கோ
இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்?
அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும்.
மன்பதை உலகம் வாஞ்சா வசமே.
வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும்
 165கடபட சடமலாற் கடவுளும் இலையேல்
வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற்
காண்டியவ் வேளை கருணையின் இயல்பே.     1
   (இருவரும் போக)

ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் - குடம். படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.