324 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் மணமண்டபம். காலம் : நடுநிசி. (அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) (நிலைமண்டில ஆசிரியப்பா) | | முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர். | 2-ம் படை | | நடரா சனைநீர் அறியீர் போலும்! | முதற்படை | | அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் | | 5 | கெடுத்தான் கிழவன். | 3-ம் படை: | | அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! | முதற்படை | | தெரியேன், செய்தியென்? | 3-ம் படை: | | கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். | | | வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட | | 10 | அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். | முதற்படை | | இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே. | 3-ம் படை: | | எத்திரை தாய்க்கென் றியம்புதி. கேட்போம். |
கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி. |