3.6 தொகுப்புரை
அன்பார்ந்த மாணவர்களே! இதுவரையிலும் மணிமேகலைக்
காப்பியம் பற்றி அறிந்தோம். இது ஒரு வழிகாட்டியே தவிர,
இதனால் மணிமேகலைக் காப்பியத்தை முழுமையாக அறிந்து
விட்டோம் என்று கூறிவிட முடியாது. இன்னும் எத்தனை
எத்தனையோ செய்திகள் இதில் பொதிந்து கிடக்கின்றன.
பல்வேறு மலர் வனம் பற்றிச் சுதமதி கூறிச் சொல்லும் பகுதி
இலக்கிய நயம் மிக்கது. மணிமேகலை பேசும் சமயத் தர்க்க
வாதமும் சமயச் சிந்தனைகளும் இங்கு
எடுத்துரைக்கப்படவில்லை. காரணம் சமயப் புலமை
மிக்கவருக்கே அது புரியும் என்பதால் இங்கு விட்டுவிட்டோம்.
தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் மணிமேகலையே
என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இம் மணிமேகலையில்
பேசப்படும் பௌத்த சமயச் சிந்தனை ஹீனாயானம், மகாயானம் இவற்றில் எது என்பதைப் பற்றி மேலும்
சிந்திக்கலாம். கிளைக் கதைகளால் நிறைந்தது மணிமேகலை;
இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு தனிப்பகுதியாகும். இயற்கை
இகந்த நிகழ்ச்சிகள் பற்றி மணிமேகலை தரும் கருத்துகள்
சுவையானவை. ‘சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை’யை
ஆழ்ந்து படிப்பவர் ஆன்மீக வாதியாக மாறிவிடக் கூடும்;
அந்த அளவிற்கு உடலின்பத்தை - உலகியல் இன்பத்தை
மறுத்துப் பேசுகிறது மணிமேகலை. சிலம்பிலே இடம்பெறும்
கோவலன், கண்ணகி கதைகள் மீள்பார்வைக்கு உள்ளாகின்றன.
கால மாற்றமும் சமயக் காழ்ப்பும் கதை அமைப்பைக் கூட
மாற்றிக் காட்டுகின்றன. சிலம்பும் மேகலையும் ஏன் இரட்டைக்
காப்பியங்கள் என்று சுட்டப்படுகின்றன. இவ்வாறு யார்
சொன்னார்கள்? ஏன் சொன்னார்கள் என்றெல்லாம் சிந்தித்துப்
பார்க்கலாம். இவ்வாறு இக்காப்பியத்தை உங்கள் சிந்தனைத்
தளத்தில் அசைபோட்டு, அதிலே பொதிந்து கிடக்கும்
கருத்துகளை வெளிக்கொணர இது ஒரு பதச்சோறு.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
|
1. |
மணிமேகலைக்கு உதயகுமரன்பால் இருந்த
காதலைச் சாத்தனார் எவ்வாறு
வெளிப்படுத்துகிறார்?
|
விடை |
2. |
மணிமேகலா தெய்வத்தின் செயல்பாடு என்ன?
|
விடை |
3. |
மணிமேகலை உணர்த்தும் சமூக நீதிக் கருத்துகள்
யாவை?
|
விடை |
4. |
மணிமேகலை உணர்த்தும் சமயச் சிந்தனை யாது?
|
விடை |
|
|