5.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை வில்லி பாரதம் பற்றிச் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • இந்திய இதிகாசங்களில் மகா பாரதம் பற்றிய பொதுவான செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

  • பண்டைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள மகா பாரதம் பற்றிய குறிப்புகளை அறிந்திருப்பீர்கள்.

  • தமிழில் வெளிவந்துள்ள பாரதம் பற்றிய நூல்களைத் தெரிந்திருப்பீர்கள்.

  • வில்லி பாரத ஆசிரியர் வில்லிபுத்தூரார் வாழ்க்கை வரலாற்றையும் அவர் காலத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

  • வில்லி பாரதக் காப்பிய அமைப்பையும் கதையையும் அறிந்திருப்பீர்கள்.

  • வில்லி பாரதக் காப்பியச் சுவையைச் சில பாடல்களின் துணையோடு அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

வில்லி பாரதம் எத்தனை பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

விடை

2.

வில்லி பாரதப் பருவங்களில் நான்கின் பெயரினைக் குறிப்பிடுக.

விடை

3.

தமிழ் மொழியின் சிறப்பு வில்லி பாரதப் பாயிரத்தில் எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?

விடை

4.

வீடுமன் இல்லாத சேனையை வில்லிபுத்தூரார் எவ்வாறு கற்பனை செய்துள்ளார்?

விடை