6.7 தொகுப்புரை

காலம், வினைச்சொல்லின் சிறப்பிலக்கணமாக அமைகின்றது. வினையடியாகப் பிறக்கும் வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் ஆகியன காலம் காட்டுகின்றன.

பெயர்ச்சொல் வகையுள் வினையாலணையும் பெயர் மட்டும் காலம் காட்டுகின்றது. அதன் இயல்பு வினைமுற்றை ஒத்து உள்ளது.

இடைநிலையே காலம் காட்டும் பொறுப்பேற்கின்றது. சிறுபான்மை, பகுதி காலம் காட்டுதலும் உண்டு. விகுதி காலம் காட்டுதல் பழங்காலத்தில் இருந்தது; இன்றைய வழக்கில் இல்லை.

முக்காலச் சொற்களும் சிற்சில காரணங்களால் தங்களுக்குள் மயங்கி வருதல் உண்டு.

இக்கருத்துகளைப் பற்றி இந்தப் பாடத்தில் தெளிவாக அறிந்து கொண்டோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

இறந்தகால வினையெச்ச வாய்பாடுகள் யாவை?

விடை

2.

‘செய‘ என்னும் வாய்பாட்டின் திரிபுகளைக் கூறுக.

விடை

3.

முக்காலத்திற்கும் உரிய வினைச்சொல் பற்றி எழுதுக.

விடை

4.

எதிர்கால வினை, நிகழ்காலத்தில் வந்து மயங்குவதற்குச் சான்று தருக.

விடை