2.5 தொகுப்புரை

இதுவரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் பற்றிக் கூறிய கருத்துகளைத் தொகுத்துப் பார்ப்போமா?

இருபதாம் நூற்றாண்டில் வானொலி, இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம், பாட நூல்கள், அறிவியல் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாகத் தமிழ் மாற்றம் பெற்றது. மேனாட்டார் வரவாலும் அச்சு இயந்திர வருகையினாலும் நிகழ்ந்த உரைநடை வளர்ச்சியின் காரணமாகவும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மாற்றம் பெற்று வளர்ந்தது.
உயிர் ஒலியன்களில் மூக்கின உயிர்களும், மெய்யொலியன்களில் ஒலிப்புடைத் தடையொலிகளும் புதியவையாக நிலைத்தன.
ஒலியன்களின் வருகை முறையில் புதிய மெய்ம்மயக்கங்கள் இடம் பெற்றன. கடன் வாங்கிய சொற்களில் ர, ல, ட போன்றவை மொழி முதலில் இடம் பெறத் தொடங்கின.
பேச்சுத் தமிழில் ஒலிமாற்றங்கள் அதிகமாக நிகழ்ந்தன.
பெயர்களுள் ஆக்கப் பெயர்கள் குறிப்பிடத் தக்கவை. புதுப்புது விகுதிகளை இணைத்து இவ்வகைப் பெயர்கள் உருவாக்கப் பெற்றன.
உயர்வு ஒருமைப் பெயர் சமுதாயத்தில் ஒருவரை மதிப்பதன் விளைவாக நிகழ்ந்த கருத்து வெளிப்பாடாக அமைகிறது.
துணை வினைகள் இல்லாமல் இக்காலத் தமிழ் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவை பேச்சிலும் எழுத்திலும் கலந்து விட்டன.
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் இடம்பெறும் இ எ, உ ஒ மாற்றம் பற்றிக் குறிப்பிடுக
விடை
2.
அண்ண இனமாதல் பற்றிக் கூறுக.
விடை
3.
ஆக்கப் பெயர்கள் உருவாவதற்கான விகுதிகளுள் எவையேனும் இரண்டனைச் சுட்டுக.
விடை
4.
உயர்வு ஒருமைப் பெயர் - விளக்குக.
விடை
5.
வினைச் சொற்களோடு சேரும் துணை வினைகளுக்குச் சான்று தருக.
விடை