2.6 தொகுப்புரை

நாட்டுப்புறவியல் கற்கும் நண்பர்களே! இதுவரை நாட்டுப்புறவியல் வரலாற்றினை

1) உலக அளவில்
2) இந்திய அளவில்
3) தமிழக அளவில்

என்று தெரிந்து கொண்டீர்கள். இதனால் தமிழக அளவில் இதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

நாட்டுப்புறவியல் தோற்றமும் வளர்ச்சியும் காலப் பகுப்பின் வாயிலாகத் தெளிவாக அறிந்து இருப்பீர்கள்.,

நாட்டுப்புறவியலின் பதிவுகளின் மூலம் நாட்டுப்புறவியலின் வழக்காற்றின் நிலைப்பாடு தெரிந்து கொள்ளமுடியும்.

எதிர்காலத்தில் எவ்வாறு நாட்டுப்புறவியல் விளங்க வேண்டும் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீங்கள் நாட்டுப்புற இலக்கியத்தின் வரலாற்றினை அறிந்து கொண்டீர்கள். இல்லையா?

1)

தொடக்க காலத்தில் நாட்டுப்புறவியலின் வளர்ச்சிக்குத் துணை செய்த இதழ்கள் யாவை?

(விடை)
2)
நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் நிலைத்த பேற்றினைப் பெறுமா? எடுத்துரைக்க.
(விடை)
3)
நாட்டுப்புறவியல் இலக்கியம் எங்ஙனம் பிற இலக்கிய வகைகளிலிருந்து (எழுத்து இலக்கியம்) வேறுபட்டு விளங்குகிறது?
(விடை)