ஒரு கவிதையை முழுமையாக அறிந்து கொள்ள அதன் இரண்டு நிலைகள் குறித்து நோக்க வேண்டும். ஒன்று பாடு பொருள், மற்றொன்று பாடலின் வடிவம். இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பன. ஆயினும் இரண்டாகப் பார்ப்பது தேவை. இதன் மூலம் பாடலின் இயல்புகளை அறிய முடியும். பாடலின் பொருளுக்கேற்ப அதன் வடிவமும் மாறுபடுகின்றது. பாரதி இவை இரண்டிலும் புதுமை படைத்துப் புதுயுகக் கவிஞராக விளங்குகிறார். பாடுபொருளின் வழியில் பாரதியின் தனித்தன்மை துலங்கும் வகையினை முதலில் காண்போம். பாடு பொருள் என்பது கவிதையின் கருவாக அமையும் கருத்து /தகவல்/ செய்தி ஆகும். இந்தக் கரு தன் அனுபவ வெளியீடாகவோ அல்லது பிறர் அனுபவ வெளியீடாகவோ விளங்கும். ஒரு நாடும் அந்த நாட்டில் வாழும் மக்களும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டும். இவை இரண்டும் இல்லாத காலத்தில் பிறந்த பாரதியின் உள்ளத்தில் விடுதலை உணர்வு எழுந்தது. அடிமைகளாக வாழ்கின்றோம் என்னும் உணர்வு கூட பாரத நாட்டு மக்களுக்கு அன்று ஏற்படவில்லை. நாட்டு மக்களின் நிலை கண்டு வருந்திய பாரதி விடுதலை உணர்வு கொண்ட பாடல்கள் பல பாடியிருக்கிறார்.
பாரதியார் பாடல்களில் பாரத நாட்டின் பாரம்பரியப் பெருமை, அந்நியர் எதிர்ப்பு, தாயின் மணிக்கொடி, சுதந்திரத்தின் பெருமை, தமிழ் மொழி, தமிழ்நாடு முதலிய கருத்துகள் பாடுபொருளாய் விளங்குகின்றன. இந்தப் பாடல்கள் பாரத நாட்டு மக்களிடம் நாட்டின் நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு அந்நிய நாட்டவர் பலர் இந்தியாவின் மீது படையெடுத்திருந்தனர். அப்போதெல்லாம் பாரத நாட்டு மக்கள் அவர்களை வெளியேற்ற ஒன்று திரண்டு எழவில்லை. ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கியிருந்தது. இதைக் கண்ட பாரதி அவர்களுக்கு நாட்டுப் பற்றை வளர்க்கும் வண்ணம் தேசியப் பாடல்கள் பல பாடியிருக்கிறார்.
தம் தாய் நாட்டின் பெருமைக்காகக் கவிதையைக் காணிக்கையாகப் படைத்த பாரதியார், தாய் நாடு உயர வேண்டுமெனில் தாய் நாட்டின் அங்கமாக விளங்கும் பல்வேறு மொழிகள், மாநிலங்கள் ஆகியவை வளம் பெற வேண்டும் என்று கருதியிருக்கிறார். தாய்மொழி என்பது மதர் டங் (mother tongue) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். தாய்மொழி என்னும் சொல்லுக்கு ‘வீட்டு வார்த்தை’ என்ற தூய தமிழ்ச் சொல்லைப் போகின்ற பாரதம் என்னும் பாடலில் பாரதி கூறியிருப்பதைக் காணலாம். இங்ஙனம் தமிழ் உணர்வையும் தேசிய உணர்வையும் இணைத்து,
(செந்தமிழ் நாடு - 1) என்று தமிழோடு தேசியத்தையும், நாட்டையும் போற்றுகிறார்.
5.3.2 தேசியத் தலைவர்களும் பிற நாடுகளும் பாரதியார் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசபக்தத் தலைவர்களைப் பாடுபொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். மேலும் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட இத்தாலி நாட்டு மாஜினியைப் பற்றி பாடியுள்ளார். மக்கள் புரட்சி நடைபெற்ற பெல்ஜியம், உருசியா போன்ற நாடுகளும் அவருக்குப் பாடுபொருளாக ஆயின. மேலே கூறியவற்றைப் பற்றி விரிவாக (C0112): பாரதியாரின் தேசியப் பாடல்கள், (C0115): பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு, (C01121): பாரதியார் படைப்புகளில் தமிழியல் சிந்தனைகள் முதலிய பாடங்களில் படித்திருப்பீர்கள்.
பாரதியார், பாரத சமுதாயத்தில் காணப்பட்ட குறைகளைக் கண்டு வருந்தி, சமுதாய ஒற்றுமையின்மைக்குக் காரணம் சாதி சமய வேறுபாடு என்று உணர்ந்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டைத் தம் பாடல்கள் வழி உணர்த்துகிறார். இயற்கையின் அழகைப் பாடினார், ஆற்றலைப் போற்றினார், உழைப்பைப் புகழ்ந்தார். மூட நம்பிக்கையை வெறுத்தார். தீண்டாமையை ஒழிக்க ஆறில் ஒரு பங்கு என்னும் கதை எழுதினார். இறை உணர்வைப் போற்றினார். தொழிலை மதித்தார். மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டும் பாடல்கள் பாடிக் குவித்தார். பாரதி போல் வேறு எந்தக் கவிஞரும் முதன்முதலாகப் பல வகையான பாடுபொருள்களைக் கொண்ட பாடல்கள் பாடவில்லை. பாரதியார் பாடல்களின் பாடுபொருள் அவருடைய புதுமை உள்ளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றது.
பாரதியார் இந்திய சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைக் களைந்தால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் அடையும் என்று கருதினார். சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார் பாரதி. ஆகவே, பெண்ணுக்கு விடுதலையும் வாழ்வும் வேண்டும் என்று பாடியிருக்கிறார். பெண் விடுதலையை மையக் கருத்தாகக் கொண்டு பாரதி பாடிய,
(பாரதி அறுபத்தாறு, பெண் விடுதலை - 45) என்னும் பாடல் பெண்ணுக்கு விடுதலை இல்லை என்று சொன்னால் இந்த உலகத்தில் வாழ்க்கையே இல்லை என்று காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமன்றிக் கடல் கடந்து அடிமைப்பட்டு வாழும் பெண்களின் விடுதலைக்காகவும் பாரதி பாடியிருக்கிறார். ஆங்கிலேயர் ‘பிஜி தீவி’ல் உள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய இந்தியப் பெண்களை அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை அடிமைப்படுத்தியது மட்டுமன்றி போகப்பெருளாகவும் பயன்படுத்திய கொடுமையை,
(கரும்புத் தோட்டத்திலே - 4) என்று பாடி அவர்கள் விடுதலை பெறக் குரல் கொடுக்கிறார் பாரதி. இஸ்லாமியர் வரவால் இந்தியப் பெண்கள் திரையிட்டு முகத்தை மறைக்கும்
பழக்கத்தைப் பாரதியார் சிறிதளவும் விரும்பவில்லை. தேவையற்ற பழக்கத்தைக் கைவிட
வேண்டும் என்ற எண்ணத்தில்,
(கண்ணம்மா என் காதலி, 18-1,2)
பெண் விடுதலை
பெற சாத்வீக முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்பினார் பாரதி. பெண்ணுக்கு
அநீதி இழைப்பவர் யார்? ஆண்கள். அந்த ஆண்கள் பெண்களுக்கு அண்ணன், தம்பி, தந்தை,
மாமன், மைத்துனன், கணவன், காதலன் என்னும் உறவுகளால் கட்டுண்டிருக்கிறார்கள்.
அவர்களை ஆயுதங்களால் எதிர்க்க இயலாது. எனவே சாத்வீக முறைப்படி ஆண்களுக்குப்
புத்திவரும்படி செய்ய வேண்டுமென்று பாரதி எடுத்துரைக்கிறார். தென் ஆப்ரிக்காவில்
இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை மகாத்மா காந்தி நியாயத்தால் வெல்ல
நினைத்த அதே முறையைத் தான் பெண்கள் கையாள வேண்டும் என்கிறார் பாரதி. ஐரோப்பாவில் மனிதர்கள் தாங்கள் விரும்பியவருடன் வாழலாம் என்று கூறும் விடுதலைக் காதலை (free - love) வன்மையாகக் கண்டிக்கிறார் பாரதி. இந்தியப் பண்பாட்டிற்கு ஒவ்வாத பழக்கங்களை விட்டு விடக் கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டு மக்களால் கட்டிக்
காக்கப்பட்டு வருவது இந்திய நாட்டுப் பண்பாடு. அதுவே இந்திய நாட்டின் சமூக
மூலதனம் (social capital) ஆகும். அந்தச் சமூக மூலதனம் குறைந்தால் கலாச்சாரச்
சீரழிவு ஏற்படும். ஆகவே. சமூக மூலதனத்தைக் காக்கும் எண்ணத்தில் விடுதலைக்
காதலைக் கண்டித்துப் பாடுகிறார் பாரதி. தனி மனிதன் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
சமுதாயம் உயர்ந்தால் நாடு உயரும். ஆகவே,
(பாரதி அறுபத்தாறு , 55-56)
5.3.4 குழந்தைகள்-எதிர்கால வித்துகள்-சமுதாயச் சிற்பிகள் இன்றைய குழந்தைகள் எதிர்காலத் தலைவர்கள். மனித வாழ்வில் குழந்தைப்
பருவமே மிக முக்கியமானது. இவ்வுண்மையை உணர்ந்து, குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட்டால்
நாட்டிற்கு நன்மை பயக்கும்.
பாப்பாப் பாட்டுத் தமிழ் இலக்கியத்தில் புதுத்துறை. பாரதியாருக்கு முன்பு
யாரும் குழந்தைப் பாடல் பாடவில்லை. குழந்தைகளின் உள்ளம் எதையும் ஏற்றுக்
கொள்ளும் நிலையில் உள்ளதாகும். பெற்றோரும் மற்றவரும் கூறும் நல்ல கருத்துகள்
அவர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியும். எனவே,
குழந்தைகளின் மனம் கொள்ளும் வகையில் அறிவுரை கூறுகிறார் பாரதி. குழந்தையை
அச்சுறுத்தியோ, கட்டுப்படுத்தியோ ஒன்றைக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். ஆகவே, குழந்தையின் மனவியல் (psychology) அறிந்த பாரதி, பாப்பாவை
அன்போடு அழைத்து,
(பாப்பா பாட்டு - 1) (வையாதே = ஏசாதே, பழித்துரைக்காதே) என்று பாடியிருக்கிறார். இதில் சோம்பியிருத்தல் ஆகாது, யாரையும் வசை சொல்லக் கூடாது, நாய், பசு போன்ற விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும், பாடம் படிக்க வேண்டும், பொய் சொல்லக் கூடாது, தாய் நாட்டுப் பற்று வேண்டும், சாதி வேறுபாடு கூடாது, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார். பாரதிக்குப் பெருமை சேர்த்த பாடல்களுள் ஒன்று சிறுவர்க்கு ஏற்ற எளிய சொற்களில் பாடலை இயற்றியிருப்பதாகும்.
|