2.2 ஐந்திணைக்கும் உரிய பொருள்கள்

நிலங்களின் அடிப்படையில் பெயர் பெற்ற ஐந்திணைகளுக்கும் உரிய பொருள்கள் பல. அவற்றை மூவகைப்பட்ட பாகுபாடுகளுக்குள் அடக்கிக்காட்டுவது இலக்கண மரபு. அவை:

(1) முதற்பொருள்
: நிலமும், நிலத்துக்குரிய பொழுதுகளும்
(2) கருப்பொருள்
: நிலத்தில் உள்ள பொருள்கள்
(3) உரிப்பொருள்
: நிலத்துக்குரிய ஒழுக்கம்

இம் மூவகைப் பொருள்களும் நிலத்தின் அடிப்படையிலேயே வகுக்கப் பெற்றுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
அகத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை

2.
அகத்திணைக்குரிய முப்பொருள்கள் எவை?

விடை

3.
கைக்கிளை - விளக்கம் தருக.

விடை

4.
அன்பின் ஐந்திணை எவை?

விடை

5.
முதற்பொருளில் அடங்கும் இரு பொருள்கள் எவை?

விடை