2.7 தொகுப்புரை

    செய்யுள் பல உறுப்புகளைக் கொண்டது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் செய்யுள் உறுப்புகள் என்பதையும், அவற்றின் அமைப்பு. இலக்கணம் ஆகியவற்றையும் இப்பாடத்தில் பயின்றோம். அசை, சீர் ஆகியவற்றின் எண்ணிக்கை, வாய்பாடு ஆகியவற்றையும் பார்த்தோம். பல்வகைப் பாக்களுக்கும் உரிய அடிவரையறைகளையும் அறிந்து கொண்டோம். செய்யுளைப் பற்றிய இந்த அடிப்படை அறிவுடன் மேற்கொண்டு பயில்வோம்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
ஏழு தளைகளும் எங்ஙனம் அமைகின்றன?
2.
வெண்பாவிற்குரிய தளைகள் எத்தனை? யாவை?
3.
பாக்களுக்கான அடிவரையறையின் சிற்றெல்லை யாது?
4.
நான்கு சீர்களுக்கு மிக்குவரும் அடிகளுக்குரிய பெயர்களை எழுதுக.
5.
முதற்றொடைகள் எனப்படுபவை யாவை?
6.
தொடை விகற்பங்கள் எத்தனை? எங்ஙனம் அத்தொகை வருகிறது?